ஒவ்வொரு பிரசைகளும் சிந்தித்து செயற்பட்டால் இந்த நாட்டை காப்பாற்ற முடியும்: சரத்பொன்சேகா
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு 65 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கும் என்று ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்தார். “பொதுவேட்பாளருக்கு வாக்களிக்குமாறு தமிழ்க் கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவித்தால், அதனைப் பயன்படுத்தி கூட்டமைப்பைக் குறிவைத்து அரசியல் இலாபம் தேடுவதற்கு அரசு நிச்சயம் முயற்சிக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி தற்போது உறுதியாகிவிட்டது. 2010 ஆம் ஆண்டிலும் நாம் வெற்றி பெற்றோம். எனினும், அந்த வெற்றி திட்டமிட்ட அடிப்படையில் கொள்ளையிடப்பட்டது.
டயஸ்பொரா மற்றும் தமிழ் இனவாதிகளுடன் இணைந்து நாட்டைபிரிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது என்ற போலிப்பரப்புரையை ராஜபக்சக்கள் முன்னெடுக்கலாம். எனவே மோசடியாளர்களிடம் இருந்து நாட்டை மீட்பது குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு பிரசைகளும் சிந்தித்து செயற்பட்டால் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply