தமிழர்களுக்கு நியாயமான தீர்வை புதிய அரசு முன்வைக்க வேண்டும் :அங்கஜன் இராமநாதன்
தமிழ் பேசும் மக்களின் அடிப்படை மற்றும் தேசிய பிரச்சினைக்கு சரியான முறையில் நிரந்தரத் தீர்வை வழங்க புதிய அரசாங்கம் உடனடியாக முன்வரவேண்டும் என வட மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளருமான அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் யோசனைகள், ஆட்சேபங்கள், குற்றம், குறைகளுக்கு செவிசாய்க்க புதிய அரசு தயாராகவே உள்ளது. இச் சமயத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக 13வது சட்டத்தை முழுமையான அளவில் செயற்படுத்தி தேசிய பிரச்சினைக்கு சரியான முறையில் நிரந்தரத் தீர்வினை வழங்க புதிய அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1987 ஜுலை 29ல் கையெழுத்திடப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் படி அரசியலமைப்பில் 13வது சட்டம் மற்றும் மாகாண சபைச் சட்டம் அறிமுகமானது இதனால் ஒன்பது மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. ஒப்பந்தத்தின் படி கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிருவாகத்தின் கீழ் கொண்டுவர இணக்கம் காணப்பட்டது. அது பிற்பட்ட காலங்களில் பலனற்று போய்விட்டது. 13வது அரசியல் அமைப்புச் சட்டம்.
இந்திய இலங்கை உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இருந்த போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணும் நீண்டகால அரசியல் செயற்பாட்டின் பிரதிபலனாக அது கட்டியெழுப்பப்பட்டது. தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினை களுக்கு அரசியல் தீர்வொன்று அவசியம் என்ற அடிப்படையை இலங்கை இந்திய ஒப்பந்தம் கொண்டிருந்தது.
2013 ஆண்டு வடக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற்ற பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நான் 13 ஆம் திருத்த சட்டத்தை அமுல்படுத் துவது தொடர்பாக கலந்துரையாடியி ருந்தேன்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சேர்ந்து முதற்கட்டமாக புனர்வாழ்வளிக் கப்பட்ட முன்னாள் போராளிகளை தேசிய பாதுகாப்பு சேவையில் தகுதி அடிப்படையில் உள்வாங்குவதுடன் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கான மாகாண சபை அதிகாரத்தையும் தேசிய பிரச்சினைக்கான நிரந்தர தீர்வையும் வழங்கவேண்டும் என்பதே எனது நீண்டநாள் கோரிக்கையாகும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது – “பிளவுபடாத இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான தீர்வு காணப்படும் என்ற அறிவிப்பு எனக்கும் தமிழ் மக்களுக்கும் ஓர் மகிழ்ச்சியான விடயமாகும். 13 ஆம் அரசியலமைப்பு சட்டத்தில் இணைந்த வடக்கு கிழக்கு உட்பட அனைத்து மாகாணங்களுக்குமான அதிகாரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட் டுள்ளன. எனவே இது புதிதாக கொண்டுவரப்பட வேண்டிய விடயம் அல்ல.
கடந்த 30 வருட காலத்தில் எம் இனம் அழிவுப் பாதையில் சென்றதைப் போன்று இனியும் செல்லக்கூடாது.
தற்பொழுது இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் அதிகப்படியான வாக்குகளை அளித்து இம் மாற்றத்தினை கொண்டுவந்துள்ளார்கள்.
இந்த வேளையில் ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேன அனைத்து கட்சிகளினதும் ஆதரவினை பெற்றுள்ள வேளையில், தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்க தங்களுக்கு இருக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply