சுன்னாகம் பகுதி அணல் மின் நிலைய கழிவு ஒயில் விடயத்திற்கு தற்போதைய அரசாங்கம் உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : சிறீரெலோ

யாழ்ப்பாணம்,சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள அணல் மின் நிலைய கழிவு ஒயில் அப்பகுதியில் உள்ள கிணறுகளில் கலக்கும் விடயத்திற்கு இன்றைய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என சிறீரெலோ இயக்கத்தின் யாழ்.மாவட்ட பொறுப்பாளர் எஸ்.செந்தூரன் கோரிக்கை விடுத்துள்ளார். சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவு ஒயில் அதனை அண்மித்த கிணறுகளில் பரவி, தற்போது உடுவில்.தாவடி, வரை வந்துள்ளதனை அவதானிக்க முடிகின்றது.இப்பிரச்சனையானது குடாநாட்டில் உள்ள சகல மக்களிற்கும்; பெரும்பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.கடந்த கால யுத்தவடுக்களிலிருந்து எமது மக்கள் மீண்டுவரும் இச்சூழ்நிலையில் உருவெடுத்துள்ள இப்பிரச்சனையானது மக்கள் மத்தியில் ஓர் அச்சஉணர்வினை ஏற்படுத்தியுள்ளதனை காணமுடிகின்றது.
இவ்மனிதாபிமான பிரச்சனைக்கு உரியதீர்வு கிடைக்குவேண்டுமென கோரி அப்பகுதிமக்களினால் போராட்டங்கள் நடாத்தப்பட்டபோதும் இதுவரை உரியதீர்வு வழங்கப்படவில்லை.எனினும் அவ் அனல்மின்நிலையத்தின் செயற்பாட்டினை உடன்நிறுத்துமாறு தற்போது மின்சக்தி,எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொவித்துள்ளபோதும் பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களிற்கு  உரிய நிவாரணம் வழங்கப்படவேண்டும் எனவும்குறிப்பிட்டுள்ளதுடன்,
கடந்த காலயுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பொருளாதாரத்தினை இழந்துள்ள அம்மக்கள் இன்று குடிநீரிற்கு அலைந்துதிரியும் நிலைஏற்பட்டுள்ளதுடன் குடிநீரை பணம்செலுத்தி வாங்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது.இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்ற அம் மக்களிற்கு தேவையான சகல நிவாரணங்களையும் வழங்க இன்றைய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளார்.

077-1242732    ஊடகப்பிரிவு
சிறீரெலோ
யாழ்.மாவட்டம்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply