ஊழல் மோசடிக்காரர் தப்பிக்கவே முடியாது கே.பிக்கு எதிரான விசாரணைகளும் ஆரம்பம்

ஊழல், மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எவரேனும் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருப்பார்களாயின், இனியும் செல்வார்களாயின் அவர்களைக் கைது செய்வது ஒன்றும் கடினமான விடயமல்ல. சர்வதேச பொலிஸாருக்கு அறிவித்த பின்னர், அவர்கள், அத்தகைய மோசடிக்காரர்களை கைது செய்து நாட்டுக்கு அனுப்பிவைப்பார்கள். அதன் பின்னர் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அத்துடன், விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச வலையமைப்பின் பொறுப்பாளராக இருந்த கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

கே.பிக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர் பல கடவுச்சீட்டுகளை வைத்திருந்தார் என்றும், பத்துக்கு மேற்பட்ட பெயர்களில் நடமாடியுள்ளார் என்றும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply