இந்தியா வந்தடைந்தார் ஒபாமா: உற்சாக வரவேற்பு

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, 3 நாள் பயணமாக இந்தியா வருகை புரிந்துள்ளார். அவர் வந்த ஏர்போர்ஸ் 1 விமானம், டெல்லி பாலம் விமான நிலையத்தில் காலை சுமார் 9.40 மணிக்கு தரையிறங்கியது.அதிபர் ஒபாமாவிற்கும், அவரது மனைவி மிச்செல்லுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்களை, மரபுக்கு மாறாக, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார்.

பின்னர் ஒபாமாவும், மோடியும் ஆரத்தழுவிக்கொண்டனர். பின்னர், ராணுவ உயரதிகாரிகளையும், பிற அதிகாரிகளையும் ஒபாமாவுக்கு, மோடி அறிமுகம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து, தமது பிரத்யேக காரில் ஒபாமாவும் அவரது மனைவியும் மவுரியா ஓட்டலுக்கு புறப்பட்டுச் சென்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply