13 ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு அதிகாரத்தைப் பகிர்ந்து தீர்வுக்குச் செல்வோம்

தேசிய பிரச்சினைக்கு தீர்வாக அரசிலயமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அதிகாரத்தை பகிரும் தீர்வு ஒன்றுக்கு செல்வோம் என்று புதிய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். முதலில் நாட்டில் சீரழிந்துபோயுள்ள ஜனநாயக விழுமியங்களை நிலைநாட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். அவற்றை நிலைநாட்டிய பின்னர் தேசிய பிரச்சினைக்கான தீர்வு குறித்து நடவடிக்கை எடுப்போம். ஆனால் அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்துக்கு குறைவான தீர்வுக்கு போகமாட்டோம் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.மேலும் 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் தேசிய பி்ரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான செயற்பாட்டை உள்ளடக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனை அவ்வாறு கோரவில்லை. பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் தீர்வு செயற்பாட்டுக்கு செல்வோம் என்றும் அமைச்சர் கூறினார்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்பாட்டில் இந்தியா எங்களுக்கு முழுயைமான உதவியை வழங்கும். கடந்த அரசாங்கத்தைப் போலன்றி எங்களுக்கு இந்தியாவிடமிருந்து சிறந்த உதவி கிடைக்கும். தேசிய பிரச்சினையை தீர்க்க இந்தியா உதவி வழங்கும். 13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்துவதே இந்தியாவின் நோக்கமாக உள்ளது எனவும் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply