சுதந்திரதின ஒத்திகையை முன்னிட்டு பாராளுமன்ற பகுதியில் இன்று போக்குவரத்து மட்டுப்படுத்தல்
எதிர்வரும் 04 ஆம் திகதி இலங்கையின் 64 ஆவது சுதந்திர தின ஒத்திகையை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் இன்று முதல் போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப் படவுள்ளன. இது தொடர்பில் பொலிஸ் தலைமை அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சுதந்திர தின ஒத்திகையை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் நாளை முதல் போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட வுள்ளதோடு இன்று காலை 8.30 தொடக்கம் நண்பகல் 12 மணிவரை பாராளுமன்ற பாதை மற்றும் பொல்திவ சந்தியினூடான பாராளுமன்ற பாதை உள்ளிட்ட சில பாதைகள் மூடப்பட்டு அதற்குப் பதிலாக விசேட போக்குவரத்து நடை முறை அமுல் படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply