சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகளிடம் இருந்து குர்தீஷ் நகரம் மீட்பு
சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் புதிய நாடு உருவாக்கியுள்ளனர். இவர்களின் ஆதிக்கத்தை ஒடுக்க அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இவர்களுக்கு ஈராக் மற்றும் சிரியாவில் வாழும் குர்தீஷ் இன மக்களின் குர்தீஷ் படையும் உதவி வருகின்றன. ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்து தியாலா மாகாணம் முற்றிலும் விடுவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று சிரியா எல்லையில் உள்ள ‘கொபானே’ என்ற குர்தீஷ் நகரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்தது. அதை மீட்க குர்தீஷ் படைகள் தீவிரமாக போரிட்டு வந்தன.
இவர்களுக்கு அமெரிக்கா தலைமையிலான படைகளும் உதவின. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு பிறகு கொபானே நகரம் மீண்டும் குர்தீஷ் வசம் ஆனது. அங்கிருந்த தீவிரவாதிகள் அனைவரும் விரட்டி அடிக்கப்பட்டு விட்டனர்.
எனவே, அங்கு தற்போது சண்டை நடைபெறவில்லை. இந்த தகவலை சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. மேலும், மக்தாலா மாவட்டத்தில் உள்ள நகரங்களையும் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்க குர்தீஷ் படை தீவிரமாக போராடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply