பெண்கள் வெற்றியே நாட்டின் வெற்றி: டெல்லியில் ஒபாமா பேச்சு

மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, இன்று தனது இறுதி நிகழ்வில் கலந்துகொண்டார். தலைநகர் டெல்லியில் உள்ள சிறி கோட்டையில் கூடிய மக்கள் கூட்டத்தில் உரையாற்றிய ஒபாமா நாட்டில் பெண்கள் வெற்றி பெற்றால் அந்த நாடே வெற்றியடைகிறது என்று கூறினார். தனது உரையின் போது அவர் மேலும் கூறியதாவது;ஒரு வீட்டில் பெண்கள் கல்வியறிவு பெற்றிருந்தால், அந்த குடும்பத்தின் குழந்தைகள் நல்ல கல்வி வளர்ச்சிளை பெறுவார்கள். இந்தியாவில் பெண்களுக்கு நல்ல வாய்ப்பும், உரிய கவுரவமும் அளிக்கப்படுகிறது. அதனால் தான் அனைத்து வகையிலும் இந்தியா முன்னேறி வருகிறது. இந்தியாவில் திறமைக்கு குறைவில்லை. இதற்கு உதாரணம், மில்கா சிங், மேரி கோம், கைலாஷ் சத்யார்த்தி ஆகியோர். இந்திய ராணுவத்திலும் பெண்களின் பங்களிப்பு மிகவும் ஆச்சர்யமளிக்கிறது. இந்த சமயத்தில் எனக்கு ராணுவ மரியாதை அளித்த பூஜா தாக்கூரை பெரிதும் பாராட்ட விரும்புகிறேன்.

இதன் மூலம் இந்தியா நாடே பெருமையடைகிறது. இந்தியாவின் வலிமையையும் இது காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு பாதுகாப்பான நாளாக அமைய வேண்டும். அவர்களுக்கு உரிய மரியாதையை தரவேண்டும். மிகவும் தகுதி வாய்ந்த அவர்களை கண்ணியத்துடன் நடத்தவேண்டும். அந்த வகையில் இந்தியா மிகவும் சிறந்து விளங்குகிறது. இது மேலும் மேலும் தொடரும் போது இந்தியா மென்மேலும் வளர்ச்சியடையும் என்று ஒபாமா தனது உரையின் போது கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply