இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதல் முறையாக எதிர்வரும் மார்ச் 31ம் திகதி பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதல் முறையாக எதிர்வரும் மார்ச் 31ம் திகதி பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ளார். அவரது இந்த விஜயத்தின் போது சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட 9 உடன்படிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரியவருகிறது. இலங்கை ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்ட பின் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் தொலைபேசி ஊடாக அழைத்து வாழ்த்து தெரிவித்திருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால வை பாகிஸ்தான் விஜயம் செய்யுமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.
அடுத்த மாதம் சீனா செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால, அதன்பின் பாகிஸ்தான் செல்கிறார். ஜனாதிபதி மைத்திரிபாலவின் பாகிஸ்தான் விஜயத்தை இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் எயார் சீப் மார் ஷல் ஜயலத் வீரக்கொடி உறுதி செய்துள்ளார்.
தென்னாசிய வலயத்தில் திறந்த பொருளாதார உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள முதல் நாடுகள் வரிசையில் இலங்கை மற்றும் – பாகிஸ்தான் திகழ்வதாக ஜயலத் வீரக்கொடி பாகிஸ்தான் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
எனவே பொருளாதாரம் உள்ளிட்ட பல்துறைகளில் இரு நாடுகளும் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தானில் தங்கியிருக்கும் போது பிரதமர் நவாஸ் ஷெரிப், இராணுவ தளபதி ரஹீல் ஷெலிப், ஜனாதிபதி மம்நூன் ஹுசைன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply