ரஷியாவில் எதிர்க்கட்சி தலைவர் சுட்டுக்கொலை
ரஷியா எதிர்க்கட்சி தலைவர் போரிஸ் நெம்சோவ் (55). இவர் கடந்த 1990–ம் ஆண்டுகளில் அதிபராக இருந்த மோரிஸ் எல்ட்சின் அரசில் துணை பிரதமராக பதவி வகித்துள்ளார். நேற்று மாலை இவர் மாஸ்கோவில் கிரம்ளின் மாளிகை செஞ்சதுக்கம் அருகேயுள்ள பாலத்தின் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு வெள்ளை காரில் வந்த மர்ம நபர் அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியில் சுட்டான்.இதனால் அவரது உடலில் பின்பகுதியில் 4 குண்டுகள் சரமாரியாக பாய்ந்தன. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.இவரது கொலைக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து அவரே தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தப்போவதாகவும் அவரது செய்தி தொடர்பாளர் டிமிட்ரி எஸ்.பெஸ்கோவ் கூறினார்.கொலை செய்யப்பட்ட போரிஸ் நெம்சேவ் அதிபர் புதினின் கடும் எதிர்ப்பாளர் ஆவார். அவரது அரசுக்கு எதிராக தொடர்ந்து மக்களை திரட்டி போராட்டம் நடத்தி வந்தார். தற்போது உக்ரைனில் ரஷியா மறைமுக போர் நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.அதற்காக போராட்டம் நடத்தினார்.
நாளை (1–ந்தேதி) மாஸ்கோவில் உக்ரைன் மீதான போருக்கு எதிராக பேராட்டம் நடத்த அழைப்பு விடுத்து இருந்தார். அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தார். அந்த நிலையில் தான் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.இவர் ரஷியாவில் ஜனநாயக சீரமைப்புக்காக தொடர்ந்து போராடி வந்தார். அதிபர் புதினால் தனது உயிருக்கு ஆபத்து. அவர் தன்னை கொன்று விடுவார் என அஞ்சுவதகாவும் கூறினார்.கடைசியாக டுவிட்டரில் புதினுக்கு தனது கருத்தை போரிஸ் நெம்சேவ் வெளியிட்டுள்ளார். அதில் ‘‘நீங்கள் உங்கள் மீதான போரை நிறுத்தினால் உங்கள் மீதான எதிர்ப்பை நிறுத்தி கொள்கிறேன்’’ என கூறியிருந்தார்.இதற்கிடையே போரிஸ் நெம்சேவ் கொலைக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இக்கொடூர கொலை குறித்து ரஷிய அரசு உரிய பாரபட்சமற்ற ஒளிவு மறைவற்ற விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.ஐரோப்பிய கவுன்சில் செக்ரக்டரி ஜெனரல் தோர்பஜான் ஐக்லாண்ட்டும் கண்டனமும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply