அமெரிக்காவில் 8 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற வாலிபர் தானும் சுட்டு தற்கொலை

அமெரிக்காவின் மிஸ் சோரி அருகே டைரோன் நகரம் உள்ளது. அங்குள்ள ஒரு வீட்டில் புகுந்த மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்துவதாக ஒரு பெண், போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு 2 பேர் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். அதே போன்று 5 பேர் சுடப்பட்டு இறந்து கிடந்தனர்.அதே நேரத்தில் அங்கு ஒருவர் குண்டு காயம் அடைந்து மயங்கி கிடந்தார். அவரை மீட்ட போலீசார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.அப்போது அவர் கொடுத்த தகவலின் பேரில் மற்றொரு வீட்டிலும் போலீசார் சென்று பார்த்த போது அங்கு ஒரு மூதாட்டி சுட்டு கொல்லப்பட்டு கிடந்தார்.

எனவே, அவர்களை சுட்டு கொன்ற மர்மநபர் யார்? எதற்காக இக்கொலை நடந்தது என தெரியவில்லை. அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் 8 பேரை சுட்டுக் கொன்ற நபர் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த காரில் பிணமாக கிடந்தார். அவர் உடலிலும் குண்டு காயம் இருந்தது. எனவே அவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply