அமெரிக்காவில் தொடரும் இந்து கோவில் மீதான தாக்குதல்கள் : ஜன்னல்கள் உடைப்பு- பயம் என்று எழுதியதால் பதற்றம்
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள கெண்ட் நகரில் இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோவிலின் பல ஜன்னல்கள் மர்ம நபர்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. கோவில் சுவற்றில் ’பயம்’ என்று ஸ்ப்ரே பெயிண்டிங்கால் வார்த்தைகள் எழுதிவைக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு இதைப் பார்த்த கோவில் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து போலீசில் புகார் அளித்தனர். இத்தாக்குதல் சம்பவம் குறித்து அமெரிக்க உளவுத்துறை, மற்றும் கெண்ட் நகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த 15-ம் தேதி சியாட்டில் நகரில் உள்ள போத்தல் இந்து கோவில் சுவரில் ’வெளியே போ’ என்று எழுதப்பட்டிருந்தது. தற்போது இரண்டாவது முறையாக மற்றொரு கோவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply