பன்றிக் காய்ச்சலுக்கு 1041 பேர் பலி : 19 ஆயிரம் பேர் பாதிப்பு- தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரம்

பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 36 பேர் பலியானதையடுத்து நாடு முழுவதும் கடந்த ஜனவரி முதல் தேதியில் இருந்து இந்நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 1041 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 19,046 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, நாட்டிலேயே மிக உயர்ந்த அளவில் ராஜஸ்தானில் 257 பேரும், அதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 256 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 151 பேரும் பலியாகியுள்ளனர். மராட்டியத்தில் 131 பேரும், தெலுங்கானாவில் 56 பேரும், கர்நாடக மற்றும் பஞ்சாப்பில் தலா 42 பேரும், அரியானாவில் 21 பேரும், ஆந்திர பிரதேசத்தில் 12 பேரும், டெல்லியில் 10 பேரும், தமிழகத்தில் 9 பேரும் பலியாகியுள்ளனர்.

இது தொடர்பாக, பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்த மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா, பன்றிக் காய்ச்சல் குறித்து மக்கள் பீதி அடைய தேவை இல்லை. நாட்டில் உள்ள அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளுக்கும் இந்நோய்க்கான பரிசோதனை மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளும் போதிய அளவு கையிருப்பில் உள்ளன என தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply