ஜனாதிபதி நாளை பிரித்தானியா விஜயம்
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை பிரித்தானியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டாவது எலிசபெத் மகாராணியின் விசேட அழைப்பையேற்று ஜனாதிபதி அங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி தலைமையிலான தூதுக் குழுவை வரவேற்க அந்நாட்டில் கோலாகலமாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இவ்விஜயத்தின் போது அந்நாட்டு அதிகாரிகளுடன் பல முக்கிய இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும் அரச ஊடகமொன்று அறிவித்துள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply