பெண்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்கும் சிறந்த எதிர்காலத்திற்காக பிரார்த்திக்கிறேன் : ஜனாதிபதி

பெண்களைப் பெருமைப்படுத்தி அவர்களது உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும் சிறந்த எதிர்காலத்திற்காகப் பிரார்த்திப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்திற்கான வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இலங்கையில் நடைபெறும் தேசிய மகளிர் தின விழாவிற்கு வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் மகிழ்ச் சியடைகின்றேன். குறிப்பிடத்தக்க சமூக மாற்றம் ஏற்படும் இந்த நவீன யுகத்தில் மகளிருக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ளுவதில் முக்கியத்துவம் பேணப்படுகிறது.

உலகில் பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய இடத்தைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் துறைகளில் சிந்தனை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

எமது கலாசார பின்னணியுடன் மனித மேம்பாட்டுக்கான பெண்களின் செயற்பாடுகள் பாராட்டுக்குரியவை. எதிர்காலத்திலும் மென்மை, கருணை இரக்கத்தின் மூலம் எமது சமூக மேம்பாட்டுக்கும் எதிர்கால பயணத்திற்கும் இம்முறை சர்வதேச மகளிர் தினம் உறுதியாக அமையும்.

நாட்டில் சகல துறைகளிலும் பெண்கள் பணிபுரிவதுடன் பொருளாதாரத்தின் மேம்பாட்டுக்கும் அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளில் மிகவும் கஷ்டப்பட்டு தொழில் புரிந்து தாய்நாட்டின் பொருளாதாரத்திற்கு நிதி வழங்கும் அவர்கள் சிறந்த தாயாகத் தம்பிள்ளைகளைப் பராமரிக்கும் உரிய பணிகளையும் மேற்கொள்கின்றனர். இந்த வகையில் அவர்கள் உண்மையில் பாராட்டுக்குரியவர்களே.

சமூக மற்றும் குடும்ப வன்முறை, பெண்களுக்கெதிரான துஷ்பிரயோகம், அன்றாட அச்சுறுத்தல்களிலிருந்து பெண் களைப் பாதுகாக்கவும் மது, போதை ஆகியவற்றின் பிரதிபலிப்புகளிலிருந்து பெண்களைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் கொள்கை ரீதியாகக் கடமைப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply