ஒருநாள் போப் ஆண்டவராக வாழ வேண்டும் என்று விரும்பும் பிரேசில் நாட்டுச் சிறுவன்

பிரேசில் நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வாழ்வின் விழிம்பில் இருக்கும் சிறுவன் ஒருநாள் போப் ஆண்டவராக வேண்டும் என்று கனவு கண்டுவருகிறான். அதை  நிறைவேற்ற வேண்டும் என சிறுவனின் பெற்றோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். பிரேசில் நாட்டில் உள்ள சா போலோ பகுதியில் உள்ள ரெண்டர்சன் பிரைட்டஸ் என்பரின் 3 வயது மகன் ரபேல் பிரைட்டஸ். ரபேல் பிரைட்டஸ் கடந்த ஓர் ஆண்டாக நியூரோபலாஸ்டோமா என்னும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இச்சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் சிறுவன் ரபேல் பிரைட்டஸ் இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிருடன் இருப்பான் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய காலத்தில் சிறுவர்கள் பல்வேறு ஆசைகள் இருக்கும் நிலையில், ரபேல் பிரைட்டசுக்கு ஒருநாள் போப் ஆண்டவர் ஆக வேண்டும் என்னும் ஆசை உள்ளது. சிறுவன் ரபேல் பிரைட்டஸ் தன்னை போப் ஆண்டவராகவே நினைத்து கொண்டு, வழிபாட்டில் ஈடுபட்டுள்ளான்.இதற்கு உறுதுணையாக அப்பகுதியில் இருக்கும் பாதிரியார் ஒருவர் சிறுவன் ரபேல் பிரைட்டஸ்க்கு வழிபாடு பயற்சிகளை கொடுத்து வருகிறார்.

சிறுவனுக்கு மிகவும் உயர் ரக மருத்துவம் கொடுத்த போதிலும் பலன்இல்லை என்றும், அவனுடைய கனவை நிறைவேற்றவாவது பிரார்த்தனை செய்து வருவதாக சிறுவனின் தந்தை தெரிவித்தார்.

வாழ்க்கையின் கடைசி நாட்களை எண்ணி வரும் சிறுவன் ரபேல் பிரைட்டசின் கனவு நிறைவேறினால் சிறுவன் பிரேசில் நாட்டை சேர்ந்த முதல் போப் ஆண்டவர் என்னும் பெருமை கொண்டவனாவான்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply