சாதாரண பயணியாக ஜனாதிபதி பிரித்தானியாவுக்கு பயணம்
பிரித்தானியாவுக்கு மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற் கொண்டு நேற்று சனிக்கி ழமை ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேன அங்கு பயணமானார். நேற்றுக் காலை 9.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனத்துக்குச் சொந்தமான ஈகே 651 என்ற சாதாரண பயணிகள் விமானத்தில் டுபாய் ஊடாக லண்டன் நோக்கி ஜனாதிபதி பயணமாகியுள்ளார். சாதாரண பயணிகள் போன்றே விதிமுறைகளைக் கடைப்பிடித்து விமானம் புறப்படுவதற்கு ஒரு மணித் தியாலத்துக்கு முன்னரே ஜனாதிபதி விமான நிலையத் துக்குச் சென்று அங்கு காத்திருந்து குறித்த விமானத்தில் ஏறியுள்ளதாகத் தெரிவிக்கப்ப டுகின்றது.
ஜனாதிபதியுடன் அவரின் பாரியார் ஜயந்தி சிறிசேன, ஜனாதிபதியின் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான ஆலோசகரும் முன்னாள் பிரிட்டனுக்கான தூதுவருமான கிரிஸ் நோனிஸ் அடங்கலான குழுவினரும் இப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரிட்டன் செல்லும் ஜனாதிபதி லண்டனில் 9ஆம் திகதி நடைபெறவுள்ள பொது நலவாய நாடுகளின் தின மாநாட்டிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply