ஜெயலலிதா வழக்கு : மேல்முறையீட்டு விசாரணை இன்றுடன் நிறைவடைகிறது

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணை இன்றுடன் நிறைவடைகிறது. ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.  அரசு தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை நிறைவு செய்துவிட்ட நிலையில், ஜெயலலிதா தரப்பில் எழுத்துப்பூர்வமாக வாதம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை அடுத்து, சுப்ரமணிய சுவாமி தனது வாதத்தை இன்று எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய உள்ளார். வழக்கு விசாரணை இன்றுடன் முடிவடைகிறது. இதனால், பெரும்பாலும் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply