இந்தியர் இருவர் இலங்கையில் மரணம்

கொழும்பு, வெள்ளவத்தையில் இந்தியர்களான இளம் ஆணினதும் பெண்ணினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஹோட்டல் அறை ஒன்றில் இருந்து இந்த சடலங்கள் நேற்று இரவு மீட்கப்படடுள்ளன. 28வயதான யுவதியும், 30 வயதான ஆணும் கடந்த 27ம் திகதியன்று இலங்கை வந்து குறித்த ஹோட்டலில் தங்கியிருந்தனர். நேற்று முன் தினம் இரவு வேளையில் வெளியே சென்­றுள்ள இந்த தம்­ப­தி­யினர் மீண்டும் பின்­னி­ரவில் ஹோட்­ட­லுக்கு திரும்­பி­யுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து தமது அறைக்கு சென்­றுள்ள அந்த தம்­ப­தி­யினர் நேற்று மாலை வரை அந்த அறையில் இருந்து வெளி­யே­றா­ததை அடுத்து சந்­தேகமடைந்த நிலை­யி­லேயே பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கப்­பட்டது.

இதனையடுத்து அறையை உடைத்துப் பார்த்த போது இந்தியர்கள் இருவரும் இறந்து கிடந்த நிலையில் சட­லங்­க­ளாக மீட்­கப்­பட்­டுள்­ளனர்.

இந் நிலையில் பொலிஸார் மேற்­கொண்ட ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­களில் இந்த தம்­ப­தியர் இரவு நேர களி­யாட்ட விடு­தி­களில் கேளிக்­கை­களில் ஈடு­ப­டு­வது, கெசினோ விளை­யாட்­டுக்­க­ளுக்கு அடி­மை­யா­கி­யுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது. அத்­துடன் இவர்கள் தங்­கி­யி­ருந்த அறையில் இருந்து அவர்கள் இறு­தி­யாக அருந்­தி­ய­தாக சந்­தே­கிக்­கப்­படும் குளிர்­பான போத்­தல்கள் இரண்டு பொலி­ஸாரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன.

அந்த போத்­தல்­களில் விஷம் கலந்­தி­ருப்­பது பொலி­ஸாரின் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்ள நிலையில் இந்த தம்­ப­தியர் குளிர்­பா­னத்தில் விஷம் கலந்து அருந்தி தற்­கொலை செய்­தி­ருக்­கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலங்கள் இரண்டும் குறித்த தனியார் ஹோட்டல் அறையிலேயே உள்ள நிலையில் காலை நீதிவான் ஸ்தலத்தை பார்வையிடவுள்ளதுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைகளும் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply