தமிழக மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது

இன்று மாலை, பருத்தித்துறை அருகே நடுக்கடலில் இந்த சம்பவம் நடைபெற்றது. மேலும், மீனவர்களின் 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இத்தகவலை இலங்கை கடற்படையின் செய்தித் தொடர்பாளர் இந்திகா சில்வா தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த மாதம் இருநாட்டு மீனவர்களிடையே சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதில், தமிழக மீனவர்கள் முன்வைத்த 7 அம்சக் கோரிக்கைகளை இலங்கை அதிபர் சிறிசேனா நிராகரித்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்று மீண்டும் 37 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது தமிழக மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply