கென்யாவிற்கு செல்வதில் எந்த மாற்றமும் இல்லை: ஒபாமா உறுதி
அமெரிக்க அதிபர் ஒபாமா தனது தந்தையின் பூர்விக நாடான கென்யாவிற்கு செல்வதில் எந்த மற்றமும் இல்லை என தெரிவித்து உள்ளார். கென்யா பல்கலைக்கழகத்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 147 மாணவர்கள் கொல்லப்பட்டனர். இதனால் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் ஒபாமா மேற்கொள்ள இருந்த பயணம் ரத்து செய்யப்படலாம் என கூறப்பட்டது. ஆனால் நேற்று கென்யா அதிபர் உகுரு கென்யாட்டேவிடம் தொலைபேசியில் பேசிய ஒபாமா அந்நாட்டிற்கு தனது ஆதரவையும், இரங்கலையும் தெரிவித்தார். அப்போது தனது கென்யா பயணத்தையும் உறுதிப்படுத்தியுள்ளார்.மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்கலைக்கழகத்தின் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு எந்த வார்த்தைகளாலும் ஆறுதல் சொல்ல முடியாது. தீவிரவாதத்திற்கு எதிரான போரில் கென்யாவுடன் அமெரிக்கா கைகோர்த்து செயல்படும் என தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply