உலகின் வறண்ட பிரதேசங்களில் ஒன்றான சிலியில் வெள்ளம்: 25 பேர் பலி, 101 பேர் மாயம்
உலகின் மிக வறண்ட பிரதேசங்களில் ஒன்றான சிலியின் அடகமா பாலைவனப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின் காரணமாக, இதுவரை 25 பேர் பலியாகியிருப்பதாகவும், 101 பேரை இன்னும் காணவில்லையென்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் அங்கு பெய்த கனமழையின் காரணமாக, தாழ்வாக இருந்த பள்ளத்தாக்குப் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. புயல் மழையின் காரணமாக, சாலைகளும், மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் தொலைதொடர்பு வசதிகளும் பாதிக்கப்பட்டது. மேலும் வெள்ளத்தினால் உண்டாகும் நோய்த் தொற்றினாலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளியன்று தேசிய அவசரகால அலுவலகம் தெரிவித்துள்ள புள்ளி விவரத்தின் படி, 30000 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,700 பேரின் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
இதையடுத்து பிராந்திய உச்சிமாநாட்டிற்கான பயணத்தை ரத்து செய்த அதிபர் மிச்செல் பசெலெ, நேற்று வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார். உள்ளூர் மக்களை மீட்க உதவுவதாகவும் உறுதியளித்தார்.
ஏற்கனவே தென்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயும் வறட்சியும் சிலி நாட்டுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இந்த வெள்ளம் அந்நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply