துணை விமானிக்கு திடீர் உடல் நலக் குறைவு: பயணிகளின் பொறுமையை சோதித்த ஏர் இந்தியா விமானம்

கொல்கத்தாவிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வரும் ஏர் இந்தியா விமானத்தின் துணை விமானிக்கு ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக, ஏர் இந்தியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கிட்டத்தட்ட 5 மணி நேரம் காக்க வைத்து பயணிகளின் பொறுமையை சோதித்துள்ளது. கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையத்திலிருந்து நேற்று மாலை 6.30 மணிக்கு புறப்பட்டிருக்க  வேண்டிய அந்த விமானம், துணை விமானிக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக வேறு ஒரு துணை விமானியை ஏற்பாடு செய்த பிறகே புறப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

விமான சேவையில் திடீர் சிக்கல்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததெனினும், ஒரு துணை விமானியை மாற்றுவதற்காக ஏர் இந்தியா நிறுவனம் அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டது பயணிகளுக்கு எரிச்சலூட்டியது.

இறுதியாக வெறொரு துணை விமானியுடன் நேற்றிரவு 11.20 மணிக்கே விமானம் புறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply