விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர் : மலேசிய பிரதமரின் உதவியாளர் உட்பட 6 பேர் பலி

மலேசியாவின் வடக்கு குவாண்டன் நகரிலிருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று, விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த அந்நாட்டு பிரதமர் நஜிப் ரசாக்கின் உதவியாளர் அலியாஸ் உட்பட 6 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். குவாண்டன் நகரில் நேற்று நடைபெற்ற மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கின் மகளுடைய திருமணத்திற்கு ஹெலிகாப்டரில் சென்றிருந்த 6 பேரும், திருமணம் முடிந்து சுபாங்க் விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த போது, செமினியா டவுனில் இந்த விபத்து நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 4.55 மணிக்கு இந்த விபத்து ஏர்பட்டுள்ளது.விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்த முன்னாள் மலேசிய மந்திரியும், அமெரிக்க தூதருமான ஜமாலுதீன் ஜப்ரிஸ் உட்பட விமானத்தில் பயணித்த 6 பேரின் பிரேதங்களும் மீட்கப்பட்டுள்ளதாக மலேசிய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடும் மழை காரணமாக ஹெலிகாப்டர் நடுவானில் வெடித்து சிதறியதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ள நிலையில் இந்த விபத்து குறித்து, உடனடியாக விசாரணையை தொடங்குமாறு அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். மேலும் தனது நீண்ட நாள் நண்பரான ஜமாலுதீன், உதவியாளர் அலியாஸ் உட்பட இந்த கோர விபத்தில் பலியான 6 பேரின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply