கென்ய நகரங்களில் ரத்த ஆறு ஓடும்: சோமாலிய தீவிரவாதிகள் மிரட்டலால் பதற்றம்

ஆப்பிரிக்க நாடான கென்யாவில், சோமாலியா எல்லையில் உள்ள காரிசா பல்கலைக்கழக கல்லூரியில், கடந்த 2-ந்தேதி முகமூடி அணிந்த அல் ஷபாப் தீவிரவாதிகள் புகுந்து மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 148 பேர் கொல்லப்பட்டனர். சோமாலியாவை சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதல், கென்யாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில் கென்யாவில் மீண்டும் புதிய தாக்குதல்களை நடத்தப்போவதாக அல் ஷபாப் தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அந்த தீவிரவாதிகள் கூறுகையில், “சோமாலியாவில் கென்யாவின் படைகள் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கென்யாவில் எங்கள் மதத்தினர் நடத்தப்படும் விதத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தும்தான் காரிசா பல்கலைக்கழக கல்லூரியில் தாக்குதல் நடத்தினோம். எங்கள் தாக்குதல் இனி தொடரும். கென்ய நகரங்களில் ரத்த ஆறு ஒடும்” என்றனர்.

இந்த மிரட்டல், கென்ய மக்களிடம் பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply