பேட்டரியில் இயங்கும் நாசாவின் 10 என்ஜின் விமானம்: சோதனை வெற்றி

பேட்டரியில் கிடைக்கும் சக்தியைக் கொண்டே இயங்கும் 10 என்ஜின் கொண்ட நாசாவின் புதிய விமானத்தின் சோதனை வெற்றிகரமாக முடிந்தது. ஒரு ஹெலிகாப்டரை போலவே டேக்-ஆப் ஆகி தரை இறங்கும் இது ஒரு விமானத்தின் சக்தியைக் கொண்டது. கிரீஸ்டு லைட்னிங் அல்லது GL-10 என்று அழைக்கப்படும் இந்த விமானம் பல்வேறு சோதனைகளில் வெற்றி பெற்றுள்ளதாக ஹாம்டனில் உள்ள நாசா மையத்தின் விண்வெளி பொறியாளர் பில் அறிவித்துள்ளார்.

இந்த விமானம் குறித்து பில் கூறுகையில் “சிறிய பொருட்களை டெலிவரி செய்ய இந்த விமானம் உதவும். விவசாயத்தை நீண்டநேரம் கண்காணிப்பது, மேப்பிங், தனி நபர் உபயோகம் என்று பல வகையில் இந்த விமானம் பயன்படும்” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply