அடிமைகள் போல் நடத்தியதாக போகோ ஹரம் தீவிரவாதிகள் மீது புகார்
நைஜீரியாவின் போகோ ஹரம் தீவிரவாதிகள், தங்களை அடிமைகள் போல் நடத்தியதாக விடுவிக்கப்பட்ட பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நைஜீரியாவில் ஒரு குறிப்பிட்ட அரசை உருவாக்க வலியுறுத்தி போகோஹரம் தீவிரவாதிகள் தொடர்ந்து நாச வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சிறுமிகளையும், பெண்களையும் அவர்கள் கடத்துவதோடு, ராணுவம் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், சாம்பிசா வனப்பகுதியில் நைஜீரிய ராணுவம் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து 275 பேரை பத்திரமாக மீட்டது. தற்போது, அவர்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்த பெண்கள், தீவிரவாதிகள் தங்களுக்கு கொடுத்த துன்பங்களை விவரித்து உள்ளனர். தினமும், கொலைகளை பார்க்க வேண்டிய அவலநிலை இருந்ததாகவும், எப்போது கொல்லப்படுவோம் என்ற பயத்திலே இருந்ததாகவும் தெரிவித்தனர். மேலும், கழிப்பறைக்கு கூட தனியாக செல்லவிடவில்லை என்றும், காய்ந்த மக்காசோளம் மட்டுமே மதியம் உணவாக தரப்பட்டது என்றும் தெரிவித்தனர். போகோ ஹரம் தீவிரவாதிகளிடம் ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, தற்போது மீட்கப்பட்டவர்கள் கடந்த ஆண்டு சிபோக் பள்ளிக்கூடத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட சிறுமிகள் அல்ல என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply