விமானத்தில் பறந்துகொண்டே இனி இன்டர்நெட் மூலம் டி.வி. பார்க்கலாம்: அமேசானுடன் ஜெட்புளூ ஏர்வேஸ் ஒப்பந்தம்

அமெரிக்காவில் உள்ள முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்று ஜெட்புளூ விமான நிறுவனம். இந்த நிறுவனம் அமெரிக்காவில் குறைந்த கட்டணத்தில் பயணிகளுக்கு சேவை வழங்கி வருகிறது. தற்போது போட்டிகள் நிலவி வரும் நிலையில், பயணிகளை தங்கள் பக்கம் இழுக்க விமானத்தில் பறக்கும்போதே லைவ் வீடியோ, படங்கள், மியூசிக் ஆகியற்றை பயணிகள் இலவசமாக பார்ப்பதற்காக அமேசான் இணையத் தளத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக இலவச வைபை மூலம் இண்டர்நெட் வசதி செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஜெட்புளூ விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் இனி லேப்டாப், மொபைல் ஆகியவற்றை விமான பயணத்தின்போதே பயன்படுத்தலாம். விரைவில் பெரும்பாலான ஜெட்புளூ விமானங்களில் பயணிகள் இந்த வசதியை பெறலாம்.

அமேசானின் பிரதான வாடிக்கையாளர் என்றால் அவர்கள் ஸ்ட்ரீம் தகவலுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இந்த ஒப்பந்தத்தின் வணிகரீதியான அம்சங்கள் குறித்து ஜெட்புளூ வெளியிடவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply