நேபாளத்தில் இன்று காலை 2 தடவை கடும் நில அதிர்வு: மக்கள் பீதி

நேபாளத்தில் கடந்த மாதம் 25–ந்தேதி மிகக்கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. அதில் பல்லாயிரக்கணக்கான வீடுகள் இடிந்து நொறுங்கின. சுமார் 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.இந்தியா, சீனா, அமெரிக்கா உள்பட 13 நாடுகள் மீட்பு பணிகளை செய்தன. இடிபாடுகளை அகற்றி உயிரிழந்தவர்களை மீட்டனர். இந்த கொடூர பூகம்பத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 16,390 ஆக அதிகரித்துள்ளது. சிந்துபால் சவுக் மாவட்டத்தில் அதிக பட்சமாக 3 ஆயிரம் பேர் உயிரிழந்து விட்டனர்.வெளிநாட்டு மீட்பு குழுக்கள் நேபாளத்தில் இருந்து வெளியேறி விட்ட நிலையில் சீரமைப்புப் பணிகளை நேபாள நாட்டு மக்களே செய்து வருகிறார்கள்.

ஆனால் அவர்களை அடிக்கடி நில அதிர்வு பயமுறுத்தி வருகிறது.இன்று காலை நேபாள நாட்டில் மையப்பகுதியில் 2 இடங்களில் கடும் நில அதிர்வு ஏற்பட்டது. சிந்து பால் சவுக் மாவட்டத்தில் அதிகாலை 2.19 மணிக்கு ஏற்பட்ட நில அதிர்வு 4 ரிக்டர் அளவு கோலாக பதிவாகி இருந்தது. டோலகா மாவட்டத்தில் ஏற்பட்ட நில அதிர்வு 5 ரிக்டர் அளவுகோலாக இருந்தது.இந்த இரு நில அதிர்வுகளும் நேபாள நாட்டு மக்களிடம் கடும் பீதியை ஏற்படுத்தியது. வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரம் கழித்தே மக்களிடம் பதற்றம் குறைந்தது.நேபாளத்தில் கடந்த மாதம் 25–ந் தேதி நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு தினம், தினம் நில அதிர்வு நீடித்தப்படி உள்ளது. இதுவரை அங்கு 150–க்கும் மேற்பட்ட நில அதிர்வு ஏற்பட்டுவிட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply