இப்போது மக்கள் காணாமற் போவதில்லை. வெள்ளைவேன் பீதி கிடையாது : ராஜித
இந்த நாட்டில் தற்போது நல்லாட்சி நிலவுகிறது. அதை எவரும் மறுக்க முடியாது. இப்போது மக்கள் காணாமற் போவதில்லை. வெள்ளைவேன் பீதி கிடையாது. மரண பயம் எவருக்கும் கிடையாது. இதுவே நல்லாட்சியின் முக்கிய இலட்சணம்.மனித உரிமையே மக்களின் வாழ்வ தற்கான உரிமை. அது இப்போது பாது காக்கப்பட்டுள்ளது. இப்போது எந்த ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதில்லை. எவரும் வெளிநட்டுக்கு ஓடித்தப்ப வேண்டிய நிலை இப்போது கிடையாது.தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் சில காலம் தேசிய அரசாங்கம் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு.
எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகளால் அக்கட்சி ஆட்சியமைக்கவும் முடியாது அதேபோன்று ஐ. தே. க வின் வாக்குகளால் ஐக்கிய தேசியக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாது.
அரசாங்கத்தை அமைப்பது ஐ. தே. க. வோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ அல்லது ஜே. வி. பி யோ அல்ல. மக்களே அதனைத் தீர்மானிக்கின்றனர். என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply