ஈராக் சிறைச்சாலையில் திடீர் மோதல்: 36 பேர் சாவு – 40 பேர் தப்பி ஓட்டம்
ஈராக்கில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதல் மற்றும் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் 36 பேர் கொல்லப்பட்டனர். தியாலா மாகாணத்தில் உள்ள காலிஸ் சிறைச்சாலையில் இன்று கைதி களுக்கிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதுபற்றி சிறையின் பாதுகாப்பு வீரர்கள் விசாரிக்க சென்றபோது மீண்டும் பிரச்சினை உருவானது. நிலைமை எல்லை மீறியதால் பாதுகாப்பு படையினர் ஆயுத பிரயோகத்தில் ஈடுபட்டனர். கைதிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 6 போலீஸ்காரர்கள் மற்றும் 30 கைதிகள் இறந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய 40 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களில் சிலர் தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் என உள்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply