ஜெயலலிதா வழக்கில் மேன்முறையீடு செய்ய கர்நாடகா முடிவு
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் மேற்முறையீடு செய்ய கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதனால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்படும்போது கர்நாடக உயர் நீதிமன்றத்தின் விடுதலை உத்தரவுக்கு தடை வாங்க ப்படக்கூடும் இதனால் ஜெயலலிதா பதவி குறித்து கேள்வி எழுப்பப்படும். ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் மேன்முறையீடு செய்வதா வேண்டாமா என முடிவு எடுக்க முடியாமல் இருந்த கர்நாடக அரசு நேற்று மேன்முறையீடு செய்ய முடிவு எடுத்துள்ளது. முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், அரசு வக்கில் ஆச்சார்யா, அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார் ஆகியோரது யோசனை குறித்து விவாதிக்கப்பட்டதை தொடர்ந்து மேன்முறையீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் இந்த மேன்முறையீடு வழக்கில் அரசு தரப்பில் ஆச்சார்யாவும் சந்தேஷ் சவுடாவும் ஆஜராவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த முடிவை வரவேற்கிறேன் என சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜரான ஆச்சார்யா கூறியுள்ளார். எனது மற்றும் ரவி வர்மாவின் ஆலோசனையை அரசு ஏற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply