​பர்மா சம்பவங்கள் தொடர்பில் மனித உரிமை அமைப்புக்கள் விரைந்து செயற்பட ஆர்வம் காட்டவேண்டும் :உதயராசா

கடந்த சில நாட்களாக  சமூக  வலைத்தளங்களில் பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள், கொலைகள் தொடர்பாக மனிதகுலத்தினால்  ஜீரணிக்க முடியாத வகையிலான பதிவுகள் வெளியாகி மனிதத்தை  நேசிக்கும் மக்களிடையே ஆழ்ந்த  அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள், பெண்கள் என்ற பாகுபாடின்றி சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலைசெய்யப்படும் காட்சிகளைப்பார்த்து மதம், இனம், நாடு என்பனவற்றிற்கு அப்பாற்பட்டு இலங்கை தமிழர்களாகிய நாமும்  ஏற்கனவே இவ்வாறான கொடுமைகளை சந்தித்தவர்கள் என்ற முறையில் பர்மாவில்  முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகள்  எம்மையும் பாதித்துள்ளது.

எனவே   இப்பதிவுகள் , சம்பவங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஐக்கிய நாடுகள் சபை  மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்கள் விரைந்து  நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துவதுடன் இலங்கை உட்பட அனைத்து நாடுகளும் இன மற்றும்  மதங்களுக்கு அப்பாற்பட்டு கடுமையான கண்டனத்தை பதிவு செய்யவதன் மூலம் இவ்வாறான மனித உரிமை மீறல்  செயற்பாடுகளை  கட்டுப்படுத்த  முன்வர வேண்டும்.எனவும் கேட்டு நிற்கின்றோம்
நன்றி
ப.உதயராசா
ஸ்ரீ ரெலோ

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply