பாகிஸ்தானில் ராணுவ தாக்குதலில் 14 தீவிரவாதிகள் பலி

பெஷாவர் பள்ளிக்கூட தாக்குதலுக்கு பின்னர் தீவிரவாதிகள் மீதான தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது. இதனையடுத்து தீவிரவாதிகளின் முகாம்களும், பதுங்கும் இடங்களும் பாதுகாப்பு படையினரால் அழிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று பல்வேறு இடங்களில் எல்லை பாதுகாப்பு படையினர் அதிரடியாக புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

கலாத் மோர்கான் ஹார்பாய் பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த பயங்கர துப்பாக்கிச் சண்டையில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 2 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் ஹார்பாயில் உள்ள ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

இதேபோல், பன்ஜ்குர் மாவட்டத்தில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 தீவிரவாதிகளும், கோகிலோவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதியும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின்போது தீவிரவாதிகளிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply