இந்தியா-அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து
அமெரிக்க ராணுவ மந்திரி அஸ்டன் கார்ட்டர், இந்தியாவுக்கு வந்துள்ளார். நேற்று அவருக்கும், இந்திய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கருக்கும் இடையே பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. 90 நிமிட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே 10 ஆண்டு காலத்துக்கான ராணுவ கட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில், மனோகர் பாரிக்கரும், அஸ்டன் கார்ட்டரும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம், ராணுவ உபகரணங்களை இரு நாடுகளும் கூட்டாக தயாரிக்கவும், உளவு தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் வகை செய்கிறது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply