சிரியாவில் பேரல் வெடிகுண்டு தாக்குதல்: குழந்தைகள் உட்பட 33 பேர் பலி

தெற்கு சிரியாவில் நடைபெற்ற பேரல் வெடிகுண்டு தாக்குதல்களில் 10 குழந்தைகள் உட்பட 33 பேர் பலியாகியுள்ளனர். சிரியாவில் மோசமான தோல்விகளால் படையினர் பலர் கொல்லப்படுவது, மற்றும் அதற்கு மாற்றாக ஆட்சேர்ப்பதற்கு கடினமான நிலை, போன்ற காரணங்களால் சிரிய அரச படையினர் தடுமாறி வரும் நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் குழு தற்போது சிரியா மற்றும் ஈராக்கில் ஒட்டுமொத்தமாக சுமார் 300,000 சதுர கிலோ மீற்றர்களை கைப்பற்றியுள்ளதாக புவியியல் பகுப்பாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தெற்கு சிரியாவில் உள்ள அலப்போ மாகாணத்தில் உள்ள டால் ரிபாத் என்ற இடத்தில் ’பேரல் பாம்ப்’ எனப்படும் ரசாயனத்துகள்கள்களால் நிறைக்கப்பட்ட பீப்பாய் வெடிகுண்டுகள் வெடித்ததில் 8 குழந்தைகள் உட்பட 16 பேர் பரிதாபமாக பலியாகினர். இதேபோல், கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள ஜப்-அல்-குப்பே நகரில் நடந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 9 பொதுமக்களும் இட்லிப் மாகாணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரும் பலியாகினர்.

இந்த தாக்குதல் சம்பவங்களில் பலர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply