ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: பலி 18 ஆக உயர்வு

மணிப்பூர் மாநிலத்தில் சண்டல் மாவட்டத்தின் வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த தாக்குதலில்  11 வீரர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் வியாழக்கிழமை காலை நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, சம்பவ இடத்தில் ஏராளமான துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பிரதமர் திரு. மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது அறிவற்றவர்களின் செயல் என்று அவர் தனது டுவிட்டர் இணையதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply