சிரியாவில் தீவிரவாத தாக்குதல்களால் மக்கள் குடிபெயர்ப்பு
பல்மிரா நகரை ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றியதையடுத்து, சிரியாவின் ஹோம்ஸ் நகருக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிக அளவு உயர்ந்திருக்கிறது. மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 4 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் தீவிரமாக நடந்து வந்தது. அந்நாட்டு அதிபர் பாஷர் அல் ஆசாத்துக்கு எதிரான இப்போரில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். கடந்த ஓராண்டாக நடைபெறும் ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் காரணமாக மேலும் பல லட்சக்கணக்கானோர் உள்நாட்டிலேயே வேறு இடங்களுக்கு தங்கள் வாழ்விடத்தை மாற்றிக்கொண்டுள்ளனர். இந்நிலையில், சிரியாவின் முக்கிய நகரமான பால்மிராவை ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர். இதனால் அங்கிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேறி அந்நாட்டின் ஹோம்ஸ் நகருக்குக் குடி பெயர்ந்து வருகின்றனர்.
இருப்பினும், ஹோம்ஸில் வசித்து வரும் பொதுமக்கள் சிலர் தீவிரவாதிகள் குறித்து தாங்கள் அச்சப்படவில்லை என்றும், சிரிய ராணுவம் தீவிரவாதிகளை நிச்சயம் முறியடிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். சிரிய ராணுவத்திடம் இருந்து நேரடியாக தீவிரவாதிகள் கைப்பற்றிய நகரம் பால்மிரா தான் என்ற நிலையில், அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தும் அல் கொய்தாவிடமும் சில பகுதிகளை ராணுவம் இழந்து விட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply