ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆச்சார்யாவை நியமித்து கர்நாடகம் உத்தரவு
சொத்து குவிப்பு வழக்கில் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவை விடுவித்ததை எதிர்த்து கர்நாடக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் வழக்கில் அரசு வழக்கறிஞராக பி.வி. ஆச்சார்யாவை நியமனம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவரை விடுதலை செய்து பெங்களூரு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பில் குளறுபடிகள் இருப்பதாகவும், இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் தமிழக எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வந்தன.
அதேபோல், ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என கர்நாடக அரசுக்கு, அம்மாநில தலைமை வழக்கறிஞரும் பரிந்துரை செய்தார்.
இந்நிலையில், கடந்த 1-ம் தேதி கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கின் அரசு சிறப்பு வழக்கறிஞராக ஆச்சார்யாவையும், அவருக்கு உதவியாளராக சந்தேஷ் சவுடாவையும் நியமித்து கர்நாடக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply