செய்தியாளரின் ட்விட் பதிவிற்காக மன்னிப்பு கேட்ட பிபிசி
பிரிட்டன் ராணி எலிசபெத் இறந்துவிடதாக செய்தியாளர் ஒருவர் தவறுதலாக ட்வீட் செய்ததற்கு, பிபிசி நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. பெண் செய்தியாளர் அஹ்மன் கவாஜா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ராணி எலிசபெத் இறந்துவிட்டார் என்று எழுதி பதிவிட்டுள்ளார். பிபிசி செய்தியாளர் ஒருவர் இவ்வாறு செய்தி பதிவிட்டதும், ராணி இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியது.
ஆனால், அந்த செய்தி தவறுதலாக பதிவிடப்பட்டதாகவும், பிபிசியில் நடந்த ஒத்திகையின் போது இந்த நிகழ்வு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் அந்த செய்தியை செய்தியாளர் கவாஜா நீக்கிவிட்டார்.
இதையடுத்து, மன்னிப்பு கோரிய பிபிசி, இரங்கல் செய்தி தொடர்பான ஒத்திகையின்போது, பிபிசி செய்தியாளர் தவறுதலாக ட்வீட் செய்துவிட்டதாகவும், அந்த ட்வீட்கள் நீக்கப்பட்டுவிட்டதாகவும் விளக்கமளித்தது.
இந்தத் தவறுதலான ட்வீட்டால் ராணி நலமாக உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனையும் விளக்கம் அளித்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply