பஷில் ராஜபக்ஷ உள்­ளிட்ட ஐவ­ரது அடிப்­படை உரிமை மீறல் மனு­மீது 12 இல் விசா­ரணை

திவி­நெ­கும திணைக்­க­ளத்தில் நிதி மோசடி இடம்­பெற்­ற­தாக கூறி தம்மை கைது­செய்து சட்­டத்­திற்கு முர­ணான வகையில் சிறையில் அடைத்­துள்­ள­தா­கவும் அதனால் தமது அடிப்­படை உரிமை மீறப்­பட்­டுள்­ள­தா­கவும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ உள்­ ளிட்ட ஐவர் தாக்கல் செய்த அடிப்­படை உரிமை மீறல் மனு எதிர்­வரும் 12, 24 , 25 ஆகிய தினங்­களில் தொடர்ந்தும் விசா­ரணை செய்­யப்­ப­ட­வுள்­ளது. பிர­தம நீதி­ய­ரசர் கே.ஸ்ரீபவன் நீதி­ய­ர­சர்­க­ளான பிரிய சாடெப், ரோஷனி அம­ர­சிங்க ஆகியோர் முன்­னி­லையில் நேற்று இரண்­டா­வது நாளா­கவும் குறித்த அடிப்­படை உரிமை மீறல் மனு விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட போதே பிர­தி­வா­தி­களின் வாதங்­க­ளுக்­காக மேற்­படி திகதி குறிப்­பி­டப்­பட்­டது.

பிர­தமர், அமைச்­ச­ரவை, நிதிக்­குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர், சட்­டமா அதிபர் உள்­ளிட்ட 45 பேரை பிர­தி­வா­தி­க­ளாக குறிப்­பிட்டு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ, செய­லாளர் கலா­நிதி நிஹால் ஜெய­தி­லக்க, திவி­நெ­கும திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பாளர் பந்­துல தில­க­சிறி ஆகியோர் தாக்கல் செய்த அடிப்­படை உரிமை மீறல் மனுக்கள் முதன்­மு­றை­யாக நேற்­று­முன்­தினம் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

மனு­தா­ரர்­க­ளான பஷில் ராஜபக் ஷ சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரொமேஸ் டி.சில்­வாவும் முன்னாள் செய­லாளர் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி­சப்­ரீயும், பணிப்­பாளர் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மனோ­ஹர டி.சில்­வாவும் மேல­திக பணிப்­பா­ளர்கள் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சஞ்­ஜீவ ஜெய­வர்த்­த­னவும் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர். நேற்­று­முன்­தினம் இந்த மனு விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட போது பஷில் சார்பில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரொமேஸ் டி.சில்வா வாதங்­களை முன்­வைத்­தி­ருந்தார். இந்­நி­லையில் ஏனைய மனு­தா­ரர்­களின் சட்­டத்­த­ர­ணிகள் நேற்­று­முன்­தினம் தமது வாதங்­களை முன்­வைத்­தனர்.

பொலிஸ் கட்­டளை சட்­டத்தின் 55 ஆவது நிதிப்­பி­ரிவின் கீழ் நிதிக்­குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவை உரு­வாக்க முடி­யாது எனவும் அதனால் உரு­வாக்­கப்­பட்­டுள்ள நிதிக்­குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு சட்­ட­வி­ரோ­த­மா­னது எனவும் அவர்கள் வாதங்­களை முன்­வைத்­தனர். அத்­துடன் சட்­ட­வி­ரோ­த­மாக உரு­வாக்­கப்­பட்­டுள்ள நிதிக்­குற்­றப்­பி­ரிவால் அர­சியல் பழி­வாங்கல் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக சுட்­டிக்­காட்­டிய மனு­தா­ரர்கள் சார்­பான சட்­டத்­த­ர­ணிகள் அந்த பொலிஸ் பிரிவு நிறு­வப்­பட்ட வர்த்­த­மானி அறி­விப்பில் குறிப்­பிட்­டுள்ள சில விட­யங்­களை சுட்­டிக்­காட்டி தமது வாதத்தை முன்­வைத்­தனர்.

குறிப்­பாக பிர­த­மரின் கீழுள்ள உப குழு­வொன்று நிதிக்­குற்றம் தொடர்­பாக முறைப்­பா­டு­களை ஏற்­ப­துடன் விசா­ரணை செய்யும் முறைப்­பாடு தெரிந்­தெ­டுத்து பொலிஸ் பிரி­வுக்கு அனுப்­புதல், கடந்த அரசின் காலத்தில் இடம்­பெற்ற மோச­டி­களை தேடுதல் ஆகி­யன தொடர்பில் அந்த வர்த்­த­மா­னியில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள வாச­கங்­களை சுட்­டிக்­காட்டி அர­சியல் பழி­வாங்­க­லுக்­கா­கவே குற்­றப்­பு­லா­னாய்வு பிரிவு இயங்கி வரு­வ­தாக மனு­தா­ரர்கள் குற்றம் சுமத்­தினர்.

திவி­நெ­கும திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் நிதி மோச­டிகள் தொடர்பில் தமது கட்­சிக்­காரர் கைது­செய்­யப்­படும் முன் கடு­வலை நீதி­வானின் கீழ் கைது தொடர்­பி­லான அறி­வித்தல் வழங்­கப்­பட்டு அவர் நீதி­மன்றில் இரவு 10.00 மணி­ய­ளவில் விசா­ர­ணைக்கு தயா­ரா­கவே இருந்­த­தா­கவும் சந்­தே­க­ந­பர்கள் மன்­றிற்கு அழைத்து செல்­லப்­படும் முன்­ன­ரேயே சிறைச்­சாலை பஸ் வண்டி நீதி­மன்ற வளா­கத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்­ட­மையும் தமது கட்­சிக்­கா­ரர்­களின் கைது திட்­ட­மி­டப்­பட்­டது என்­ப­தற்கு சிறந்த உதா­ரணம் எனவும் மனு­தா­ரர்­களின் சட்­டத்­த­ர­ணிகள் குறிப்­பிட்­டனர்.

முன்­னைய வழக்கு தீர்ப்பு பல­வற்றை உதா­ரணம் காட்டி வாதா­டிய குறித்த சட்­டத்­த­ர­ணி­களின் வாதம் மாலை 4.55 மணி­வரை நீடித்­தது. இந்­நி­லையில் நேற்­றைய தினத்­தோடு மனு­தா­ரர்­த­ரப்பு வாதங்கள் நிறை­வுக்கு வந்­தன. தாம் அநியாயமாக கைதுசெய்யப்பட்டு சிறையில் இடப்பட்டுள்ளதால் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக இந்த வாதங்களூடாக மனுதாரர் சார்பு சட்டத்தரணிகள் மன்றிற்கு அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து பிரதிவாதிகள் சார்பி லும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. முதல் பிரதிவாதியான பிரதமர் ரணில் விக்கிரம சிங்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் வாதத்தை முன்வைக்க தயா ரானபோது மனுமீதான விசாரணைகள் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply