பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் அடைமழைக்கு 16 பேர் பலி

பாகிஸ்தானில் உள்ள பலோசிஸ்தான் மாகாணத்தில் பெய்த கனமழைக்கு 16 பேர் பலியாகியுள்ளனர். இந்த மாகாணத்தின் தலைநகரான குவேட்டாவில் இருந்து 370 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது குஸ்தார் மாவட்டம். இங்குள்ள கால்வாய் அருகே நாடோடி மக்கள் தற்காலிக குடில் அமைத்து வசித்து வந்தனர். இங்கு பெய்த கனமழையால் மலையின் வழியாக கரை புரண்டு வந்த வெள்ளம் கால்வாயில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தற்காலிக வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர்.

கால்வாயில் திடீரென வெள்ளம் அதிகரித்ததால் என்ன நிகழ்ந்தது என்பதை உணர்வதற்குள் வெள்ளம் அவர்களை இழுத்துச் சென்றது. இதில் சில பேர் தப்பித்தனர். ஆனால், தங்களது உறவினர்களை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இதனால் 16 பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் கடந்த 2010-ம் ஆண்டிற்குப் பிறகு இவ்வாறு கனமழையில் பலத்த சேதம் ஏற்படும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் பெஷாவரில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையில் 26 பேர் பலியானார்கள். 180-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply