கராச்சியில் ரேஞ்சர்ஸ் படை அதிரடி தாக்குதல்: 5 தாதாக்கள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் கராச்சி நகரில் கடந்த மாதம் இஸ்மாயிலி ஷியா முஸ்லிம் பிரிவினர் தங்கள் வழிபாட்டு தலத்துக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தபோது, வழிமறித்து தாக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் 46 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.அதைத் தொடர்ந்து கராச்சி நகரிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் பாதுகாப்பு படையினர் உள்ளூர் தாதாக்களையும், தீவிரவாதிகளையும் தேடி பிடித்து வருகின்றனர். இந்த நிலையில், கராச்சி லியாரி பகுதியில் நேற்று ரேஞ்சர்ஸ் படையினர் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களை கண்டதும், உள்ளூர் தாதா கும்பலை சேர்ந்தவர்கள் சரமாரியாக சுட தொடங்கினர். ரேஞ்சர்ஸ் படையினரும் திருப்பி சுட்டனர்.

இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இறுதியில், உஜைர் பலுச், பாபா லத்லா என்ற தாதா கும்பலை சேர்ந்த 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் கராச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply