ஐ.எஸ். அமைப்பு மிகப்பெரிய தீவிரவாத இயக்கம்: அமெரிக்கா

உலகளவில் மிக மோசமான தீவிரவாத இயக்கமாக கருதப்பட்ட அல்-கய்தாவை, ஐ.எஸ். அமைப்பு முந்தி விட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உலகின் பயங்கரவாத இயக்கங்களில் முக்கியமானதாக செயல்பட்டு வந்தது அல்கய்தா தீவிரவாத இயக்கம். அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, அதனை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியது. இந்த நிலையில், ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, அல்கய்தாவையே மிஞ்சிவிட்டதாக தெரிவித்துள்ளது.

தீவிரவாத இயக்கத்திற்கு புதிய ஆள்சேர்ப்பு, படுகொலைகளை நடத்துதல் உள்ளிட்ட விஷயங்களில் அதன் செயல்பாடு தீவிரத்துடன் இருப்பதாக அமெரிக்க உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகளால் உலகம் முழுவதும் இளைஞர்கள் ஈர்க்கப்படுவதாகவும் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply