யோகாவுக்கு மதச்சாயம் பூசியதாக மோடி மீது வழக்கு

யோகா கலைக்கு  மதச்சாயம் பூசி, மக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி மீது பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  பாஜக  தலைவர் அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோர் மீதும் இதே போன்ற குற்றசாட்டை சுமத்தி,  பீகார் மாநிலம்  பாட்னா தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தேவ் குமார் சிங் என்ற சமூக ஆர்வலர் சார்பில் வக்கீல் சுருதி சிங் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கு, இன்று  நீதிபதி பரத் சிங் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply