இடைத்தேர்தல் முடிந்த பின் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்: வெங்கைய நாயுடு தகவல்
ஆர்.கே இடைத்தேர்தல் முடிந்த பின்னர் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஓராண்டு சாதனையை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சென்னை எம்.ஆர்.சி. நகரில் கூட்டம் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் ஏராளமான பா.ஜ.க. வினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அவர், இதுவரை உள்ள வெளியுறத்துறை அமைச்சர்களில் சுஷ்மா சுவராஜ் தான் சிறந்தவர் என்றும் லலித் மோடி விவகாரத்தில் அவர் எந்த தவறும் செய்யவில்லை எனவும் கூறினார்.
பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியா மீதான வெளிநாடுகளின் பார்வை மாறியுள்ளதாக குறிப்பிட்ட அவர், மக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
மேலும் பாஜக ஆட்சியில் அன்னிய முதலீடு அதிகரித்து இருப்பதாகவும், குறை காண்பதிலேயே எதிர்க்கட்சிகள் குறியாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply