ஆப்கன் நாடாளுமன்றம் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்தது

ஆப்கானியத் தலைநகர் காபூலில் உள்ள நாடாளுமன்றம் மீது தாலிபான் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலை பாதுகாப்பு படைகள் முறியடித்துள்ளன. நாடாளுமன்றத்தில் நுழைய முயன்ற துப்பாக்கிதாரிகள் ஆறு பேரையும் பாதுகாப்பு படைகள் சுட்டுக்கொன்றுள்ளன.முன்னதாக, நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு வெளியில் கார் குண்டு ஒன்றை தாக்குதல்காரர்கள் வெடிக்கச் செய்தனர். அதற்குப் பிறகு அந்த வளாகத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள், கூட்டம் நடக்கும் அவைக்கு அருகில் இருந்த கட்டிடத்தில் நுழைந்தனர்.

இதையடுத்து, அவையில் இருந்தவர்களை காவல்துறையினர் வெளியேற்றினர். தொடர்ந்து துப்பாக்கிதாரிகளுடன் சண்டையிலும் ஈடுபட்டனர்.

புதிதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நியமிக்கப்பட்டதை ஏற்கும் வகையில் வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்ததால் இந்தத் தாக்குதலை நடத்தியதாக தாலிபான்கள் தெரிவித்துள்னர்.

கிட்டத்தட்ட ஒருமணி நடந்த துப்பாக்கிச் சண்டையின் முடிவில் துப்பாக்கிதாரிகள் ஆறு பேரும் கொல்லப்பட்டனர். 18 பேர் காயமடைந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் காயமடையவில்லை.ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் வெளியேறியதிலிருந்து அங்கு நடக்கும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply