ல.சு.க அரசை அமைப்பதே எமது நோக்கம் பொதுத் தேர்தலில் வெற்றியீட்ட ஒத்துழைக்கவே வேண்டும் : மைத்திரிபால சிறிசேன

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்க மொன்றை அமைப்பதே எமது நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையக த்தில் கட்சியின் நாடளாவிய இளைஞர் பிரதிநிதிகள் மத்தியில் நேற்று உரையாற்றிய ஜனாதிபதி, பொதுத் தேர்தலை வெற்றிக்கொள்ளும் வகையில் அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்றில் அரசாங்கங்கள் அமைந்ததும் அரசாங்கங்கள் வீழ்ச்சியடைந்ததும் இடம்பெற்றுள்ளன, என குறிப்பிட்ட ஜனாதிபதி 2010ல் பாராளுமன்றத்துக்குப் பிரவேசித்த 127 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பிக்களும் அதன் பின்னர் கட்சித் தலைமையகத்தையும் கட்சியின் செயற்பாடுகளையும் அலட்சியம் செய்வதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் முன்னணி மாநாடு நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வின் தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

“நாட்டை வெற்றி கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் முன்செல்வோம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்க்கட்சித் தலைவர் நிமல்சிறிபால டி சில்வா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான அமைச்சர்கள் ஏ.எச்.எம். பெளஸி, துமிந்த திசாநாயக்க, அர்ஜுன ரணதுங்க, எஸ்.பி. நாவின்ன, பிரதியமைச்சர்கள் சாந்தபண்டார, எரிக் வீரவர்தன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம ஜயந்த உட்பட அரசியல் பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

கட்சியின் முதலாவது தலைவர் எஸ். டபிள்யூ. பண்டாரநாயக்க முதல் அனைத்து தலைவர்களும் அரசாங்கத்தை ஆட்சி செய்தவிதம், எதிர்க்கட்சியிலிருந்த போது செயற்பட்டவிதம் தொடர்பில் தற்போதுள்ள கட்சியின் இளைஞர் முன்னணியினர் அறிந்திருப்பது முக்கியமாகும்.

நமது அனுபவங்களை இதனூடாக வளர்த்துக் கொள்வதும் மிக அவசியமானது. எனது அரசியலுக்கும் கட்சியின் இளைஞர் அமைப்பே ஆரம்பமாக இருந்தது.

கட்சிக்குள் கொள்கையடிப்படையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் எமக்கு சிறந்த எதிர்காலமுண்டு. இதனூடாக மக்கள் எதிர்பார்க்கும் சமூகமாற்றம், அரசியல் மாற்றம், அரசியல் இலக்கு ஆகியவற்றை ஈட்டிக்கொள்ள முடியும்.

இளைஞர் அமைப்பில் தொகுதிவாரியாக செயற்படும் அமைப்பாளர்கள் இதனைக் கருத்திற்கொள்ள வேண்டும்.

இளைஞர் அமைப்பில் தொகுதிவாரியாக செயற்படும் அமைப்பாளர்கள் இதனைக் கருத்திற்கொள்ள வேண்டும். நாம் யாப்பில் திருத்தம் மேற்கொண்டு தொகுதி இளைஞர் அமைப்பு தலைவர் இளைஞராகவும் யுவதிகள் அமைப்புத் தலைவி யுவதியொருவராகவும் இருக்க வேண்டுமென்ற நியதியை ஏற்படுத்தினோம். மாற்றம் பெற்று வரும் யுகத்திற்கு இடமளிக்கும் நோக்கிலேயே இத்திருத்தம் ஏற்படுத்தப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்த வரையில் பொதுத் தேர்தலுக்காக செயற்படும் போது தமது தொகுதிகளில் இளைஞர் அமைப்புகளின் தலைவர்களோடு தோழமையுடன் செயற்பட்டு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டியது முக்கியமாகும்.

மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக உறுதியாக நாம் செயற்படும் போது கிராமியமட்டத் திலுள்ள எமது அனைத்து அமைப்புகளும் பலப்படுத்தப்பட வேண்டியது அவ சியமாகும். கட்சிக்கு இளைஞர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளக் கூடியவகையில் சிறந்த முறையில் இந்த செயற்பாடுகள் அமைவது முக்கியமாகும். அவர்களின் கருத்துக்கள் விருப்பு வெறுப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணி தொடர்பில் பேசும் போது: 2010ல் பாராளுமன்றத்துக்கு வந்த 127 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இளைய எம்.பிக்கள் இன்று வரை எமது இத்தகைய செயற்பாடுகளில் பங்கேற்பதில்லை. இது தொடர்பில் நான் பல முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது வெற்றியளிக்கவில்லை என்பதால் அது பற்றி நான் மேலும் பேசப் போவதில்லை.

கட்சியின் தலைமையகத்தோடு இணைந்து செயற்படாவிட்டால் அமைச்சர்களாக எம்.பி.க்களாக செயற்பட்டு கட்சி தலைமையகத்தை அலட்சியம் செய்தால் அதை ஏற்றுக் கொள்ளமுடியாது.

கட்சியின் நிர்வாகம் நிர்வாகம் உட்பட அனைத்து நடவடிக்கைகளும் கட்சித் தலைமையகத்தின் மூலமே முன்னெடுக் கப்படுகின்றன. கட்சியிலுள்ள கொள்கை, ஒழுக்கம், வினைத்திறன் மிக முக்கியமானது. கட்சி, அரசாங்கம் தொடர்பான விமர் சனங்கள், கருத்துக்கள் அவசியமானவை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நவீனமயப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையக மண்டபத் தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாகத் திறந்து வைத்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply