சந்திரிக்கா திடீர் லண்டன் பயணம்: நாடு திரும்பியதும் விசேட உரை
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்குள் நிலவும் வேட்பு மனு பிரச்சினை காரணமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க திடீரென வெளிநாடு சென்றுள்ளார். நேற்று மாலை அவர் லண்டன் நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவார காலம் லண்டனில் தங்கியிருக்கும் அவர், பின் நாடு திரும்பி அரசியல் சூழ்நிலை குறித்து விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலோசகரான சந்திரிக்கா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்ட குழுவினருக்கு வேட்பு மனு வழங்க எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னரே சந்திரிக்கா நாடு திரும்புவார் என கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply